செய்திகள்

அமராவதி சர்க்கரை ஆலை ஊழியர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்

Published On 2018-09-11 16:56 IST   |   Update On 2018-09-11 16:56:00 IST
அமராவதி சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், நான்கு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஆலை முன்பு கஞ்சி தொட்டி திறப்பு போராட்டத்தை நடத்தினர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அரசுக்கு சொந்தமான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இங்கு 50 அலுவலக ஊழியர்கள் 250 தொழிலாளர்கள் மற்றும் 70 தற்காலிக தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 4 மாதமாக அனைத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இது குறித்து தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் கேட்டும் சம்பளம் வழங்கவில்லை. இந்நிலையில் சம்பளம் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன்படி கறுப்பு பேஜ் அணிந்து வேலை செய்தல், அலுவலகம் முன்பு தர்ணா, உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரதம் நடத்தினர்.

தொடர்ந்து இன்று தொழிலாளர்கள் சர்க்கரை ஆலை முன்பு கஞ்சி தொட்டி திறப்பு போராட்டத்தை நடத்தினர். இன்று மாலைக்குள் முடிவு எட்டப்படவில்லை என்றால் உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் குடியேறும் போராட்டடம் நடத்துவோம் என்று போராட்ட கூட்டுக்குழு கூறினர்.

டி.எஸ்.பி. ஜெய்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், ஓம்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Tags:    

Similar News