செய்திகள்

அரசு நிதியில் ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்டுவதை எதிர்த்து வழக்கு

Published On 2018-09-03 14:02 IST   |   Update On 2018-09-03 14:02:00 IST
ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, அரசு நிதியில் நினைவகம் கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Jayalalithaa #HC
சென்னை:

ஐகோர்ட்டில், தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ரவி ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

‘ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை பெற்றவர். அவர் மரணமடைந்ததும், மெரினா கடற்கரையில் அவரது உடலை புதைத்துள்ளனர்.

தற்போது, தமிழக அரசு சுமார் ரூ.50 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்ட முடிவு செய்துள்ளது. மக்கள் வரிப்பணத்தை மக்களின் நலனுக்காகவே செலவு செய்ய வேண்டும். ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, அரசு நிதியில் நினைவகம் கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இதற்கு தடை விதிக்கவேண்டும்.


இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், கல்யாணசுந்தரம் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் சிவஞான சம்பந்தம் ஆஜராகி வாதிட்டார்.

மனுவுக்கு வருகிற 18-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர், வருவாய் மற்றும் நிதித் துறை செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Jayalalithaa #HC
Tags:    

Similar News