என் மலர்
நீங்கள் தேடியது "Jayalalithaa memorial place"
சென்னை மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை அமைப்புடன் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. #Jayalalithaa
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ.50.08 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. நினைவிட கட்டுமான பணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மே மாதம் 7-ந்தேதி அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து உடனடியாக கட்டுமான பணிகள் தொடங்கியது. தொடர்ந்து இரவு பகலாக கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்டு அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நினைவிட கட்டுமான பணியில் 10 பகுதி வேலையில் 6 பகுதி வேலை முடிக்கப்பட்டுவிட்டது. நடைபாதை, வாகன நிறுத்தம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.
அருங்காட்சியகம், அறிவு சார் மையம், மேற்கூரை அமைக்கும் பணி நடக்க இருக்கிறது. மெயின் கட்டிடத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் சூப்பர் ஸ்டெக்சர் அமைக்கப்படுகிறது.
பீனிக்ஸ் பறவை தோற்றம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் வரை அமைக்கப்படுகிறது. இந்த பணிக்கு ஐ.ஐ.டி. நிபுணர்கள் ஸ்டெக்சுரல் வடிவமைப்பு செய்து கொடுத்துள்ளனர். அந்த கட்டுமான பணிகள் மட்டும் ஐ.ஐ.டி. நிபுணர்களின் மேற்பார்வையில் அமைக்கப்படுகிறது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஜெயலலிதா நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை கட்டுமான பணிகள் ஜனவரி இறுதிக்குள் முழுமை அடையும். ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி நினைவிடத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்குள் அனைத்து பணிகளும் முழுவதுமாக முடிக்கப்பட்டு விடும்.
இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa

ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, அரசு நிதியில் நினைவகம் கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Jayalalithaa #HC
சென்னை:
ஐகோர்ட்டில், தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ரவி ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
‘ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை பெற்றவர். அவர் மரணமடைந்ததும், மெரினா கடற்கரையில் அவரது உடலை புதைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், கல்யாணசுந்தரம் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் சிவஞான சம்பந்தம் ஆஜராகி வாதிட்டார்.
மனுவுக்கு வருகிற 18-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர், வருவாய் மற்றும் நிதித் துறை செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Jayalalithaa #HC
ஐகோர்ட்டில், தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ரவி ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
‘ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை பெற்றவர். அவர் மரணமடைந்ததும், மெரினா கடற்கரையில் அவரது உடலை புதைத்துள்ளனர்.
தற்போது, தமிழக அரசு சுமார் ரூ.50 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்ட முடிவு செய்துள்ளது. மக்கள் வரிப்பணத்தை மக்களின் நலனுக்காகவே செலவு செய்ய வேண்டும். ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, அரசு நிதியில் நினைவகம் கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இதற்கு தடை விதிக்கவேண்டும்.