செய்திகள்

தொண்டியை நகரசபையாக மாற்ற வேண்டும்- இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை

Published On 2018-07-28 17:08 IST   |   Update On 2018-07-28 17:08:00 IST
தொண்டி, நம்புதாளை மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களை சேர்த்து நகர சபையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான குருசாமி முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

தொண்டியானது முன்பு துறைமுக நகரமாக விளங்கியுள்ளது. இப்போதும் முதல் நிலை பேரூராட்சியாகவும் மக்கள் தொகை அதிகம் கொண்டதாகவும், தொழிற்துறையில் வளர்ந்து வரும் நகரமாகவும் விளங்குகிறது.

கிராமமான நம்புதாளையானது, திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட 47 கிராம பஞ்சாயத்துக்களில் அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாக உள்ளது.

இந்த 2 பகுதிகளையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் ஒன்றிணைத்து தொண்டியை நகரசபையாக மாற்றினால் பெரிய நகரமாக மாறவும், தொழிற்சாலைகள் உருவாகவும் வாய்ப்பாக அமையும்.

எனவே தொண்டி, நம்புதாளை பகுதிகளை இணைத்து நகரசபையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News