செய்திகள்

விவசாயி கொலை வழக்கில் அ.தி.மு.க நிர்வாகி உள்பட 6 பேருக்கு சிறை

Published On 2018-07-18 12:24 GMT   |   Update On 2018-07-18 12:24 GMT
விவசாயி கொலை வழக்கில் வத்தலக்குண்டு அ.தி.மு.க நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:

வத்தலக்குண்டு விராலிபட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகளை அப்பகுதியை சேர்ந்த சிலர் கல்லால் தாக்கியுள்ளனர். இதனால் இருதரப்பிற்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் அழகர்சாமி தரப்பினர் சுப்புராஜ் தரப்பை சேர்ந்த ராஜா அழகர்சாமியை (வயது32) அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

இதுதொடர்பாக அழசர்சாமி, அவரது மகன் சதீஸ்குமார், தெய்வேந்திரன், ரவிச்சந்திரன், நாகராஜன், ராமசாமி, சுதாகர் ஆகிய 7 பேர் மீது வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதில் சுதாகர் அ.தி.மு.க மாணவரணி ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு நடந்து கொண்டிருந்தபோது ராமசாமி இறந்துவிட்டார். திண்டுக்கல் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதுரசேகரன் வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். #tamilnews
Tags:    

Similar News