செய்திகள்

தலித் என்ற முத்திரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பலவீனமாக இருக்கிறது - திருமாவளவன் ஆதங்கம்

Published On 2018-07-17 12:18 IST   |   Update On 2018-07-17 12:18:00 IST
தலித் என்ற முத்திரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பலவீனமாக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #VCK
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய் திரள்வோம்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் திருமாவளவன் பேசியதாவது:

விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடங்கியபோது, அதன் தலைவர் திருமாவளவன். இந்த சமூகம் இதை எப்படி பார்க்கிறது என்றால், திருமாவளவன் தலித் என்பதால் அந்த கட்சி தலித் கட்சி.  ஒரு நொடியில் அது  தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது.

தலித் கட்சி என்றவுடன் அந்த பரிமாணம் என்னவாக முடிகிறது என்றால், 80 சதவீத மக்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்று முடிகிறது. 20 சதவீத தலித்துகளுக்கானது தான் என்ற நிலையை உருவாக்கிவிடுகிறது. இந்த முத்திரையானது எனக்கும், நான் உருவாக்கிய கட்சிக்கும் ஒரு பெரிய பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 80 சதவீத மக்களை அது என்னிடம் இருந்து தனிமைப்படுத்துகிறது.

ரஜினி, கமல், விஜயகாந்த் கட்சி தொடங்கினால் அது அனைவருக்குமான கட்சி. திருமாவளவன் கட்சி தொடங்கினால் அது தலித்துகளுக்கான கட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.  #Thirumavalavan #VCK
Tags:    

Similar News