செய்திகள்

ஊஞ்சலூர் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி

Published On 2018-07-02 17:52 IST   |   Update On 2018-07-02 17:52:00 IST
ஊஞ்சலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை ரெயிலில் அடிபட்டு இறந்தவர் சிவகிரியை அடுத்த பருத்திகொட்டான் பாளையத்தை சேர்ந்த வேலுசாமி(வயது55).கூலி தொழிலாளி என தெரிய வந்தது.

வேலுசாமிக்கு சரியாக காது கேட்காது என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வேலுசாமி ஊஞ்சலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் வேலுசாமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வேலுசாமி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News