செய்திகள்

உத்திரமேரூர் அருகே பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2018-06-08 12:02 IST   |   Update On 2018-06-08 12:02:00 IST
உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்:

உத்திரமேரூரை அடுத்த கன்னிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கடம்பநாதன். இவரது மகன் மோகன் (வயது 38). விவசாயி. இவர்களது வீட்டுக்கு மதுராந்தகத்தை அடுத்த அதிமனம் கிராமத்தை சேர்ந்த உறவினர் முரளி வந்து இருந்தார்.

பின்னர் முரளியை உத்திரமேரூரில் பஸ் ஏற்றி விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு மோகன் சென்றார்.

திருப்புலிவனம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேகத்தடையை தாண்டும் போது பின்னால் வந்த தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோகன் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முரளிக்கு இரண்டு கால்களும் முறிந்தது. உடனடியாக முரளியை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

விபத்தால் கோபம் அடைந்த பொதுமக்கள் தனியார் பஸ்சின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான மோகனுக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். #Tamilnews
Tags:    

Similar News