செய்திகள்

பாகூரில் குடும்ப தகராறில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2018-05-31 17:12 IST   |   Update On 2018-05-31 17:12:00 IST
பாகூரில் குடும்ப தகராறில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலுசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:

பாகூர் பங்களா வீதி பகுதியை சேர்ந்தவர் வினோத், பெயிண்டர். இவரது மனைவி தமிழரசி (வயது 25). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு புத்திரன் (6), ரட்சன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். தமிழரசி மேலும் குழந்தை வேண்டாம் என்று குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார். இதனால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போனது. இந்த நிலையில் வினோத் 15 நாள் சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பினார்.

தமிழரசி என்னையும், குழந்தைகளையும் கவனிக்காமல் சுற்றுலா சென்று விட்டீர்களே? என கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று வினோத் வேலைக்கு சென்று விட்டு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

கதவை தட்டியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது தமிழரசி பேன் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

வினோத் கதவை உடைத்து மனைவியை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் வில்லியனூர் மாவட்ட கலெக்டர் உதயகுமார் உத்தரவின் பேரில் தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது. #tamilnews
Tags:    

Similar News