திமுக அரசின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது- பிரதமர் மோடி
- 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் எனது முதல் பயணம் இது.
- தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராகிவிட்டது என்பது தான்.
பாரத் மாதா கீ ஜே எனக் கூறி பிரதமர் மோடி உரையைத் தொடங்கினார். அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், அன்புமணி, டிடிவி தினகரன் ஆகியோரை பிரமர் வரவேற்று பேசினார்.
கூட்டணி கட்சி தலைவர்கள் பெயர்களை கூறிய பிரதமர் மோடி, இளம் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம் என்று கூறினார்.
பின்னர் மேலும் அவர் கூறியதாவது:-
2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் எனது முதல் பயணம் இது. பொங்கலுக்கு பின் சிறப்பான ஆனந்தம் நிறைந்திருக்கிறது.
பொங்கல், எம்ஜிஆர் பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பான நாட்கள் உள்ள மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளேன்.
மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமரை வணங்குகிறேன், தமிழ்நாட்டின் நலனிற்காகவும் வேண்டிக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக மனிதர் எம்ஜிஆர். இங்கு கூடியுள்ள கூட்டம் நாட்டிற்கு ஒரு செய்தி சொல்கிறது. தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராகிவிட்டது என்பது தான்.
மோசமான திமுக ஆட்சியில் இருந்து தமிழ்நாடு விடுபடத்துடிக்கிறது, தமிழ்நாடு என்டிஏ கூட்டணியை விரும்புகிறது.
தமிழ்நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது தான் நம் அனைவரின் உறுதிப்பாடு.
திமுக அரசின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.