உலகம்

800 பேரின் மரண தண்டனையை நிறுத்தினாரா? டிரம்ப் சொன்னது பச்சைப் பொய்: ஈரான் தலைமை வழக்கறிஞர்

Published On 2026-01-23 18:51 IST   |   Update On 2026-01-23 18:51:00 IST
  • 800 பேரின் மரண தண்டனை நிறுத்தியதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
  • அப்படி எண் இல்லவே இல்லை என்கிறார் ஈரான் தலைமை வழக்கறிஞர்.

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி கடுமையாக அதிகரித்தது. இதனால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் பலர் உயிரிழந்தனர்.

போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். இதனால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது.

இதற்கிடையே தன்னுடைய தலையீடு காரணமாக ஈரான் 800 பேரின் மரண தண்டனையை நிறுத்தியுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டிரம்ப் சொல்வது பச்சைப் பொய் என ஈரான் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "டிரம்ப் சொல்வது தவறானது. அப்படிப்பட்ட எந்த எண்ணும் இல்லை. மேலும் நீதித்துறை அப்படிப்பட்ட எந்த முடிவையும் எடுக்கவில்லை" என்றார்.

ஈரானில் நாடு தழுவிய போராட்டம் காரணமாக மிகப்பெரிய அளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாகவும், கைது செய்யப்பட்ட சிலர் மரண தண்டனை குற்றச்சாட்டு எதிர்கொண்டுள்ளனர் என செய்திகள் வெளியானது.

Tags:    

Similar News