செய்திகள்

ஈரோடு அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

Published On 2018-05-16 22:42 IST   |   Update On 2018-05-16 22:42:00 IST
ஈரோடு அருகே ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தறிப்பட்டறை தொழிலாளி பலியானார்.
ஈரோடு:

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 45). தறிப்பட்டறை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஈரோடு நசியனூர் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ், ஸ்கூட்டரின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அந்தோணிராஜ் படுகாயம் அடைந்தார். உடனே அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அந்தோணிராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News