செய்திகள்
கணியம்பாடி அருகே கார் மோதி விவசாயி பலி
கணியம்பாடி அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த சதுப்பேரியை சேர்ந்தவர் சதானந்தம் (வயது 56). விவசாயி.
சதானந்தம் சம்பவத்தன்று தனது உறவினர் சிங்காரவேலு (58). என்பவருடன் கணியம்பாடியிலிருந்து வேலூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். பைக்கை சிங்காரவேலு ஓட்டினார்.
கணியம்பாடி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பைக்கிற்கு பெட்ரோல் போடுவற்காக சிங்காரவேலு, சதானந்தத்தை பைக்கில் இருந்து சாலையின் ஓரம் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
அப்போது கண்ணமங்கலத்திலிருந்து வேலூர் நோக்கி வந்த கார் சாலையின் அருகே நின்று கொண்டிருந்த சதானந்தத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் சதானந்தம் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதானந்தம் இறந்தார்.
இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.