உள்ளூர் செய்திகள்
டெம்போ வேனில் குட்கா கடத்திய 2 பேர் கைது
- ஒரு டெம்போ டிராவலர் வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
- வேனில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று மாலை ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில், வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு டெம்போ டிராவலர் வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 350 கிலோ தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் அவற்றை யும், டெம்போ டிராவலர் வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், பெங்க ளூரு கெங்கேரி பகுதியை சேர்ந்த சேத்தன் (26) மற்றும் நெலமங்கலா அருகே தாசன்புராவை சேர்ந்த யோகேஷ் (22) ஆகிய இருவரும் ஓசூர் வழியாக சென்னைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.