உள்ளூர் செய்திகள்

ராஜகிரீஸ்வரருக்கு சங்காபிஷேகம்.

ராஜகிரீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

Published On 2022-12-13 08:54 GMT   |   Update On 2022-12-13 08:54 GMT
  • பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவிய பொடி, பழங்கள் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.
  • சங்குகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சங்காபிஷேகம்.

நாகப்பட்டினம்:

வேளாங்கண்ணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு முன் மண்டபத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவிய பொடி, பழங்கள் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து சங்குகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சங்காபிஷேகம் செய்யப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News