உள்ளூர் செய்திகள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அறங்காவலர்களை நியமிக்க வேண்டும்- பக்தர்கள் கோரிக்கை

Published On 2023-09-06 14:04 IST   |   Update On 2023-09-06 14:04:00 IST
  • முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும்.
  • இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 15 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

உடன்குடி:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கு குலசேகரன்பட்டினம் தசரா பக்தர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

முத்தாரம்மன் கோவில்

திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவில்கள் ஒன்று ஆகும். இங்கு ஆண்டுதோறும் நடை பெறும் தசரா பெரும் திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்து 2-வது இடம் வகிக்கும் இக்கோவிலில், இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 15 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

24-ந்தேதி மகிஷாசுர சம்ஹாரம் நடக்கிறது. பல லட்சம் பக்தர்கள் குடும்பத்துடன் கூடி பல்வேறு வேடமனிந்து தங்களது வேண்டுதல்களை செலுத்தும் தசரா விழாவாகும். ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கள் கூட்டம் கூடுவது ஆண்டுக்கு ஆண்டு கோடிக்கணக்கான உண்டியல் வருமானம் வருவது இக்கோவிலின் சிறப்பு ஆகும்.

அறங்காவலர்கள் நியமனம்

இக்கோவிலுக்கு பல ஆண்டுகளாக அறங்காவ லர்கள் நியமிக்கப்பட்ட வில்லை. இதனால் தசரா பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை பணிகள் மற்றும் பல்வேறு திருப்பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக அறங்காவ லர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News