செய்திகள்

கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கவிஞர் வைரமுத்து மரியாதை

Published On 2018-08-09 02:34 GMT   |   Update On 2018-08-09 02:34 GMT
சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கவிஞர் வைரமுத்து பால் ஊற்றி மரியாதை செலுத்தினார். #Karunanidhi #KarunanidhiFuneral #Vairamuthu
திமுக தலைவர் கருணாநிதி உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

முன்னதாக கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி மற்றும் ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அரசு மரியாதையுடன் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி அளித்தனர். 

கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, நேற்று இரவு முதல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அதிகாலையிலேயே கருணாநிதிக்கு பலரும் அஞ்சலி செலுத்த வந்தவண்ணமாக உள்ளனர். 



மேலும் கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது மகன்கள் மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்துவும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து பால் ஊற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கூறினார். #Karunanidhi  #KarunanidhiFuneral #KalaignarAyya #Vairamuthu

Tags:    

Similar News