செய்திகள்

கருணாநிதி உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது - காவேரி மருத்துவமனை விளக்கம்

Published On 2018-07-26 19:33 IST   |   Update On 2018-07-26 19:48:00 IST
கலைஞர் கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து விளக்கம் அளித்துள்ள காவேரி மருத்துவக்குழு அவரது உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #DMK #MKstalin
சென்னை:

தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். 95 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது.

சமீபத்தில் அவருக்கு இந்த குழாய் மாற்றப்பட்டது. இந்நிலையில், அவரது உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வயது மூப்பின் காரணமாக அவரது உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கருணாநிதியின் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. இதனால், அவருக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு அவரது வீட்டில் கண்காணித்து வருகின்றனர்.

கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையினை கருத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வரவேண்டாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Karunanidhi #DMK #MKstalin
Tags:    

Similar News