குழந்தை பராமரிப்பு

குழந்தைகளின் பற்களை பாதுகாக்க செய்ய வேண்டியவை

Published On 2023-02-24 04:32 GMT   |   Update On 2023-02-24 04:32 GMT
  • குழந்தைகளுக்கு புளூரைடு நிரம்பிய பற்பசையை பயன்படுத்த வேண்டும்.
  • குழந்தைகளின் பற்களை பெற்றோர் சுத்தம் செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கான பற்கள் பாதுகாப்பு குறித்து டாக்டர் வினுசியா பாலாஜி கூறுகையில், குழந்தைகள் பிறந்த 6 மாதங்களில் இருந்து பற்கள் வளர தொடங்கிவிடும். சிறு குழந்தைகளுக்கு விரலில் மாட்டிக்கொண்டு பல் துலக்கும் பிரஸ்(பிங்கர் பிரஸ்) மூலம் பல் துலக்க பழக்கப்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு புளூரைடு நிரம்பிய பற்பசையை பயன்படுத்த வேண்டும். தூங்கும் முன்பு பால்குடிக்கும் பழக்கம் உள்ள குழந்தைகள் பல் துலக்கிவிட்டு தூங்க வேண்டும். அவ்வாறு முடியாத பட்சம் ஈர துணியை கொண்டு குழந்தைகளின் பற்களை பெற்றோர் சுத்தம் செய்ய வேண்டும்.

முடிந்த வரை குழந்தைகளை வாயு நிரப்பட்ட குளிர்பானங்களை குடிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும். நொறுக்கு தீனிகளான சிப்ஸ் வகைகள், சாக்லேட் உள்ளிட்டவற்றை குறைக்க செய்யலாம். பல் சிகிச்சையை பொறுத்தவரை பெரியவர்களை விட குழந்தைகளுக்கு செய்வது மிகவும் கடினம்.

எனவே குழந்தைகளுக்கு சொத்து சேர்ப்பதை விட, பற்களில் சொத்தை சேர்க்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

மேற்சொன்ன ஆலோசனைகளை பின்பற்றினால், ஆரோக்கியமான புன்னகை உங்கள் வசம் என்றார்கள்.

Tags:    

Similar News