குழந்தை பராமரிப்பு
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள்

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள்

Update: 2022-04-21 06:15 GMT
தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு உகந்ததாக இருப்பதால் குழந்தைகளுக்கு பல் சிதைவு ஏற்படும் அபாயம் குறைகிறது.
பச்சிளம் குழநதைக்கு தாய்ப்பால் கொடுப்பது அதன் ஆரோக்கியத்திற்க பல்வேறு வகைகளில் நன்மைகள் பயக்கும்.

குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் குறையும். ஒவ்வாமை பிரச்சனையும் எட்டிப்பார்க்காது

உடல் பருமன் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. டைப்-1, டைப்-2, நீரிழிவு நோயும் குழந்தையை நெருங்காது.

காதுகாளில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். இரைப்பை குடல் அழற்சி பாதிப்பும் ஏற்படாது.

மூளையின் வளர்ச்சி சீராக நடைபெறுவதற்கான சூழல் உண்டாகும்.

போலியோ, டெட்டனஸ் டிப்தீரியா மற்றும் ஹீமோபிலஸ் இன்ப்ளூபய்ஸா போன்ற தடுப்பூசியின் செயல் பாட்டுக்கு தாய்ப்பால் சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது.

தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு உகந்ததாக இருப்பதால் பல் சிதைவு ஏற்படும் அபாயம் குறைகிறது.

தாய்ப்பால் தவறாமல் கொடுப்பது அவசியமானது. அது அறிவாற்றல் வளர்ச்சி செயல்திறனுடன் தொடர்புடையது.

நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சியால் குழந்தை அவதிப்படும் வாய்ப்பு குறைவு.
Tags:    

Similar News