வழிபாடு
null

நாளை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்கும் நாள்

Published On 2023-11-16 06:16 GMT   |   Update On 2023-11-16 06:38 GMT
  • ஸ்ரீஐயப்ப பூஜையையும் முறையாக செய்ய வேண்டும்.
  • ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்பவர்களுக்கு அனைத்து இன்பமும் கிடைக்கும்.

நாளை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்கும் தினமாகும். நாளை காலை குரு மூலம் துளசி அல்லது ருத்ராட்ச மாலை அணிந்து முறையாக ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் இருப்பார்கள். மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சில அடிப்படையான பழக்க வழக்கங்களை யும் கடைபிடிக்க வேண்டும். எந்த ஒரு ஜந்துவையும் உடலாலோ மனத்தாலோ துன்புறுத்தக்கூடாது. பேச்சு, எண்ணம், செயல் ஆகியவற்றில் உண்மையாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்குச் சேர வேண்டிய பொருளை தான் எடுத்துக் கொள்ளுதல் அல்லது அனுபவிக்கக் கூடாது.

தினசரி அதிகாலை நேரத்தில் குளித்து தூய ஆடை அணிந்து அவரவர்களுக்கு உண்டான நித்ய கர்மாக்களை செய்து ஸ்ரீஐய்யப்ப பூஜையையும் முறையாக செய்ய வேண்டும். கண்ட காட்சிகளை கண்களால் காணாதிருத்தல், கெட்ட சத்தங்களையே காதால் கேட்காது இருக்க வேண்டும். இவ்வாறு தவம் இருந்து ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்பவர்களுக்கு அனைத்து இன்பமும் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை.

Tags:    

Similar News