வழிபாடு

தினமும் கோவிலுக்கு வந்து நடனமாடும் மயில்: வெள்ளி கொலுசு கட்டிய அர்ச்சகர்...!

Published On 2023-11-30 04:44 GMT   |   Update On 2023-11-30 04:44 GMT
  • நடனமாடுவதைப் பார்த்து, மக்கள் ஆச்சரியமடைகின்றனர்.
  • ஆறு ஆண்டுகளாக மயில், இந்த கோவிவில் உள்ளது.

தோகை விரித் தாடும் மயிலின் கால்களில், அர்ச்சகர் ஒருவர் வெள்ளிக்கொலுசு அணி வித்துள்ளார். இந்த மயில் தினமும். கோவிலுக்கு வந்து நடனமாடுவதைப் பார்த்து, மக்கள் ஆச்சரியமடைகின்றனர்.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் மானுார் கிராமத்தில் அனந்த பத்மநாப சுப்பிரமணியர் கோவிலில் உள்ள மயில் ஒன்று, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மயில் தோகையை விரித்து நடனமாடும் அழகை பார்க்கவே, தினமும் பக்தர்கள் வருகின்றனர்.

கோவில் அர்ச்சகர் ராஜேஷ் பட், நவராத்திரியின் போது மயிலின் கால்களில் வெள்ளிக் கொலுசு அணிவித்தார்.

தற்போது கொலுசு ஒலிக்கு தகுந்தார் போன்று, மயில் நடனமாட தொடங்கியுள்ளது. ஆறு ஆண்டுகளாக மயில், இந்த கோவிவில் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் ஒருவர், தனக்கு கிடைத்த பறவை முட்டைகளை, அடைகாத்து வைத்திருந்தார். அவை தானாகவே பொரித்து, மூன்று மயில் குஞ்சுகள், ஒரு கோழி குஞ்சு வெளியே வந்தன.

மயில் குஞ்சுகளை, கோவிலில் ஒப்படைத்தார். இரண்டு மயில்கள் எங்கோ சென்று விட்டன. ஆனால் ஒரு மயில் மட்டும் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற வீடுகளின் அருகிலேயே உள்ளது. இந்த மயிலுக்கு அர்ச்சகர், மயூரா என பெயரிட்டுள்னார். இவரது குடும்பத்தினருடன், மயில் மிகவும் நெருக்கமாக பழகுகிறது. அழைத்தால் அருகில் செல்கிறது.

தினமும் இரவு பூஜையின்போது. தவறாமல் மயில் வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் மொபைல் போனில் போட்டோ எடுத்தால், தோகையை விரித்து "போஸ் கொடுக்கிறது. மொபைல் போனை கண்டால், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தோகை விரித்தாடுகிறது.

Tags:    

Similar News