வழிபாடு

ராமர் கோவில் அட்சதை கலசத்திற்கு சிறப்பு பூஜை

Published On 2023-12-20 05:35 GMT   |   Update On 2023-12-20 05:35 GMT
  • அட்சதை கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
  • திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திருக்கனூர்:

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட அட்சதை கலசம் திருக்கனூர் கடைவீதியில் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

ஊர்வலத்திற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, கலசத்தை கையில் ஏந்தியவாறு திருக்கனூர் கடை வீதியில் இருந்து கே.ஆர்.பாளையம் செங்கேணி அம்மன் கோவில் வரை நடந்து சென்றார்.

அவருடன் ராமர், லட்சுமணன், சீதை வேடம் அணிந்த பக்தர்களும் பஜனை பாடல்களை பாடியவாறு மேளதாளத்துடன் சென்றனர்.

பின்னர் கோவிலில் வைத்து அட்சதை கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News