வழிபாடு

சகல பாக்கியங்களைத் தரும் நந்த சப்தமி

Published On 2023-12-19 03:00 GMT   |   Update On 2023-12-19 03:01 GMT
  • பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும்.
  • பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம்.

இந்த நாளில் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும். பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம். கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. செல்வ வளம் தரும் மகாலட்சுமி அதன் பின்பாகத்தில் வசிக்கிறாள்.

மாடுகளைப் போற்றி வளர்க்கும் இல்லங்களில், மகாலட்சுமி மகிழ்ந்துறைவாள். அவற்றை கொடுமைப்படுத்தினால், பெரும் பாபத்தை அடைந்து, பிறவிகளில் பெருந்துயரை அனுபவிக்க நேரிடும்.

பஞ்சகவ்யம் (பால்,தயிர், நெய்,சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கு உகந்தது; மருந்தாகவும் செயல்பட்டு பிணியை அகற்றும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் காலடி பட்ட இடம் பரிசுத்தமாகும். மேய்ந்து, வீடு திரும்பும் பசுமாடுகளின் குளம்படி பட்டு தூசி மேலே கிளம்பும் வேளையை, நல்லதொரு வேளையாக `முகூர்த்த சாஸ்திரம்' சொல்கிறது. அதேபோல், நாம் செய்த பாவங்கள் அகல, `கோ' தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

Tags:    

Similar News