கிரிக்கெட்
null

அதிக விலைக்கு எடுக்கப்பட்ட டாப் 2 வீரர்களின் அணிகள் ஐபிஎல் இறுதிப்போட்டியில் மோதுகின்றன

Published On 2024-05-25 09:35 GMT   |   Update On 2024-05-25 12:11 GMT
  • 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது.

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதே போல் 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது.

இதில் சுவாரசியம் என்னவென்றால், நடப்பு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட டாப் 2 வீரர்களின் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

ஐபிஎல் தொடரில் மினி ஏலம் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாக அரங்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய வீரர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் டைரஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் இவ்வளவு தொகைக்கு ஏலம் போவது முதல் முறையாகும். இதற்கு முன்னதாக முன்னதாக பேட் கம்மின்சை 20.50 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.

நடப்பு ஐ.பி.எல். தொடர் ஏலத்தில் அதிகம் விலை போன வீரர்களின் விவரம் வருமாறு:

மிட்செல் ஸ்டார்க்: ரூ.24.75 கோடி (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்)

பேட் கம்மின்ஸ்: ரூ.20.50 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

டேரில் மிட்செல்: ரூ.14 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

ஹர்ஷல் படேல்: ரூ.11.75 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)

அல்ஜாரி ஜோசப்: ரூ.11.50 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

Tags:    

Similar News