கிரிக்கெட்

ரோகித் சர்மா

இங்கிலாந்து சென்றுள்ள ரோகித் சர்மாவுக்கு கொரோனா

Update: 2022-06-25 22:50 GMT
  • கடைசி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிப்பு
  • ரோகித் சர்மா தனிமைபடுத்தப்பட்டுள்ளதுடன் மருத்துவ குழு கண்காணிப்பில் உள்ளார்.

லண்டன்:

கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்தின் லீசெஸ்டயர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை நடத்தப்பட்ட ரேபிட் கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஹோட்டலில் அவர், தனிமைபடுத்தப் பட்டுள்ளதாகவும், மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி இங்கிலாந்து அணியுடன், இந்திய அணி பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா இதில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

முன்னதாக மாலத்தீவு சென்று விட்டு திரும்பிய விராட் கோலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகின. ஆனால் அவர் தப்போது குணமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News