கிரிக்கெட் (Cricket)
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
- 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
- சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இந்த போட்டியின் மூலம் சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார். டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 போட்டி இதுவாகும். இதனால் கடந்த 4 டி20 போட்டிகளில் போதிய ரன்களை குவிக்காத சாம்சன் சொந்த ஊரில் பார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.