கிரிக்கெட் (Cricket)

U19 உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்

Published On 2026-01-31 13:05 IST   |   Update On 2026-01-31 13:05:00 IST
  • சூப்பர் சிக்ஸ் சுற்று நாளையுடன் முடிகிறது.
  • பாகிஸ்தான் வீழ்த்தினால் 8 புள்ளியுடன் தகுதி பெறும்.

16-வது ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.

இதில் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. கடந்த 23-ந்தேதி 'லீக்' ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் ஜப்பான், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, தான்சானியா ஆகிய 4 நாடுகள் வெளி யேற்றப்பட்டது. 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு 12 நாடுகள் தகுதி பெற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டன.

குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

குரூப் 1 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன.

குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளிகள் பெற்று அரைஇறுதிக்கு முன்னேறிவிட்டது. 2-வது அணி எது என்பது நாளை தெரியும்.

சூப்பர் சிக்ஸ் சுற்று நாளையுடன் முடிகிறது. புல வாயோவில் நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவில் 2-வதாக அரை இறுதிக்கு நுழையும் அணி எது என்பது தெரியவரும்.

இந்திய அணி 6 புள்ளியுடன் இருக்கிறது. பாகிஸ்தான் வீழ்த்தினால் 8 புள்ளியுடன் தகுதி பெறும். பாகிஸ்தான் 4 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி வெற்றி பெற்றால் இரு அணிகளும் சமபுள்ளியை பெறும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு நாடு தகுதி பெறும். பாகிஸ் தானை விட இந்தியா ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது.

ஆயுஸ் மாத்ரே தலைமையிலான அணி பாகிஸ்தானை தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

இந்திய அணி இந்த தொடரில் தோல்வியை தழுவவில்லை. 'லீக்' சுற்றில் அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வங்காள தேசத்தை 18 ரன் வித்தியா சத்திலும், நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும் 'சூப்பர் 8' சுற்றில் ஜிம்பாப் வேயை 204 ரன் வித்தியா சத்திலும் தோற்கடித்தது.

பாகிஸ்தான் அணி 'லீக்' சுற்றில் ஸ்காட்லாந்து (6 விக் கெட்), ஜிம்பாப்வே (8 விக் கெட்) வென்றது. இங்கிலாந்திடம் 36 ரன்னில் தோற்றது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் நியூசி லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

Tags:    

Similar News