கிரிக்கெட் (Cricket)

2வது போட்டியிலும் வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

Published On 2026-01-31 23:16 IST   |   Update On 2026-01-31 23:16:00 IST
  • டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 198 ரன்கள் குவித்தது.

லாகூர்:

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி லாகூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. சல்மான் ஆகா 40 பந்தில் 76 ரன்னும், உஸ்மான் கான் 36 பந்தில் 53 ரன்னும் சேர்த்தனர். ஷதாப் கான் 28 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 35 ரன்னும், மேத்யூ ஷா 27 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 15.4 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் டி20 தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.

பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது, ஷதாப் கான் தலா 3 விக்கெட்டும், உஸ்மான் தாரிக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது சல்மான் ஆகாவுக்கு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News