கிரிக்கெட் (Cricket)
சர்வதேச டி20 போட்டிகளில் குறைவான பந்துகளில் 3000 ரன்களை கடந்து சூர்யகுமார் சாதனை
- இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
- கேப்டன் சூர்யகுமார் 30 பந்துகளில் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் 30 பந்துகளில் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் குறைவான பந்துகளில் (1822) 3000* ரன்களை கடந்து சூர்யகுமார் சாதனை படைத்தார்.