கிரிக்கெட் (Cricket)
null

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டி: இஷான் கிஷன் அதிரடி சதம் - 271 ரன்கள் குவித்த இந்தியா

Published On 2026-01-31 20:42 IST   |   Update On 2026-01-31 21:05:00 IST
  • சொந்த மாநிலத்தில் விளையாடிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்
  • சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும் அபிஷேக் சர்மா 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.

இதையடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் - சூரியகுமார் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சூரியகுமார் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார். 103 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 17 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. 

Tags:    

Similar News