கிரிக்கெட் (Cricket)

சூர்யகுமார் யாதவை நீக்குவதற்குப் பதில் இதை பண்ணுங்க- ஐடியா கொடுத்த தினேஷ் கார்த்திக்

Published On 2023-03-20 16:09 IST   |   Update On 2023-03-20 16:09:00 IST
  • சூர்யகுமார் யாதவ் திறமை வாய்ந்த வீரர்.
  • சூர்யகுமார் யாதவை 6-வது இடத்தில் களமிறக்க வேண்டும்.

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும் 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22-ந் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி 2-வது ஒரு நாள் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் கோல்ட டக் முறையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கருத்து எழுந்தது.

இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ்விற்கு ஆதரவு தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

சூர்யகுமார் யாதவ் திறமை வாய்ந்த வீரர். அவரை அணியிலிருந்து நீக்குவதற்குப் பதிலாக அவர் களமிறங்கும் இடத்தை வேண்டுமென்றால் மாற்றலாம். ஹர்திக் பாண்டியா டாப் ஆர்டரில் களமிறங்கி விளையாட விருப்பம் கொண்டவர்.

ஆதலால், அவருக்கு 4-வது இடம் கொடுத்துவிட்டு, சூர்யகுமார் யாதவை 6-வது இடத்தில் களமிறக்க வேண்டும். அவர் கடைசி 18 முதல் 20 ஓவர்களில் சிறப்பாக விளையாடுவார். ஆகையால் அதற்கேற்ப அவரை பயன்படுத்திக் கொண்டால் அணிக்கு நல்லது.

என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News