கிரிக்கெட்
null

அடுத்த டெண்டுல்கர்- கங்குலி ஜோடி கில்- ஜெய்ஸ்வால்: ராபின் உத்தப்பா

Published On 2023-08-13 05:33 GMT   |   Update On 2023-08-13 07:49 GMT
  • 15.3 ஓவரில் 165 ரன்கள் குவித்தனர்
  • இந்தியா 17 ஓவரில் 179 ரன்களை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று புளோரிடாவில் நடைபெற்ற 4-வது போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான சுப்மான் கில்- ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

15.3 ஓவரில் இந்த ஜோடி 165 ரன்கள் குவித்தது. ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் அடித்தனர். சுப்மான் கில் 47 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வால் 51 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 179 இலக்கை 17 ஓவரிலேயே எட்டியது. முதல் மூன்று போட்டிகளில் சொதப்பிய சுப்மான் கில் அதிரடி வாணவேடிக்கை நிகழ்த்தினார்.

இந்த நிலையில் அப்போதைய சச்சின் டெண்டுல்கர்- சவுரவ் கங்குலி ஜோடியை போன்று இந்த ஜோடியால் ஆக முடியும் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு வீரர்களும் சமமான திறனைப் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து விளையாடிய வகையில், ஒருவருக்கொருவர் பேட்டிங் செய்ய முடியும். அதற்கான வழியை அவர்கள் தேடுவது அவசியம். அவ்வாறு செய்தால், இந்திய அணியின் அபாயகரமான தொடக்க வீரர்களாக பல ஆண்டுகள் நீடிப்பார்கள். அவர்கள் சச்சின் டெண்டுல்கர்- கங்குலி போன்று சிறந்த ஜோடியாக திகழ்வார்கள்.

அவர்கள் ஆட்டத்தின் சில பிரச்சனைகளை அவர்கள் கண்டுபிடித்து, அதை சரியான முறையில் செய்தால், இந்தியாவுக்கு மிகப்பெரிய பலனாக அமையும்'' என்றார்.

Tags:    

Similar News