கிரிக்கெட்

என்னுடைய சதம் வெற்றிக்காக அமைந்ததில் மகிழ்ச்சி- சூர்யகுமார் யாதவ்

Published On 2023-12-15 05:22 GMT   |   Update On 2023-12-15 05:22 GMT
  • இந்தப் போட்டியில் பீல்டிங்கின் போது சூர்ய குமார் யாதவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
  • தற்போது நான் நலமாக இருக்கிறேன். என்னால் நடக்க முடிகிறது என சூர்யகுமார் யாதவ் கூறினார்.

ஜோகன்னஸ்பர்க்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 56 பந்தில் 100 ரன்னும் (7 பவுண்டரி, 8 சிக்சர்), ஜெய்ஷ்வால் 41 பந்தில் 60 ரன்னும் (6 பவுண்டரி,3 சிக்சர்) எடுத்தனர். கேசவ் மகராஜ், லிசாட் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவரில் 95 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 106 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டேவிட் மில்லர் அதிகபட்சமாக 25 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மார்க்ராம் 14 பந்தில் 25 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இந்தப் போட்டியில் பீல்டிங்கின் போது சூர்ய குமார் யாதவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் பெவிலியன் சென்ற அவர் களத்துக்கு வரவில்லை. 

வெற்றி குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

தற்போது நான் நலமாக இருக்கிறேன். என்னால் நடக்க முடிகிறது. காயத்தால் பயம் எதுவுமில்லை. எனக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. சதம் அடித்தது அற்புதமாக இருந்தது.

இந்த சதம் வெற்றிக்காக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் பயமில்லாத கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். வீரர்களின் திறமையை நினைத்துப் பெருமைபடுகிறேன்.

குல்தீப் யாதவ் பிறந்தநாளில் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சிறந்த பிறந்தநாள் இதுவாகும்.

இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.

அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 17-ந் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.

Tags:    

Similar News