கிரிக்கெட்

தீபக் சாகர்,ரோகித் சர்மா,அர்ஷ்தீப் சிங்

தென் ஆப்பிரிக்காவின் ஐந்து விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தியதே வெற்றிக்கு காரணம்: ரோகித் சர்மா

Update: 2022-09-28 21:15 GMT
  • ஆடுகளம் 20 ஓவர்களுக்கும் உதவியதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
  • தொடக்கம் முதலே அர்ஷ்தீப் சிங், தீபக் சாகர் விக்கெட்களை எடுத்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளதாவது:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், ஆரம்பம் முதலே வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாகர் விக்கெட்களை எடுக்க ஆரம்பித்து விட்டனர். பவர்பிளேயின் போது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணிக்கு சாதகமாக மாற்றியது. விக்கெட் கடினமாக இருந்தது.

இதுபோன்ற விளையாட்டை விளையாடுவதில் நீங்கள் நிறைய கற்றுக் கொள்கிறீர்கள். ஆடுகளம் 20 ஓவர்களுக்கும் உதவியதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக ஆடுகளம் இருக்கும் போது எப்படி பந்து வீச வேண்டும் என்பதற்கு இந்த போட்டி சரியான காட்சியாக இருந்தது.

Tags:    

Similar News