கிரிக்கெட் (Cricket)
கனடா அணிக்கு எதிராக பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு
- பாகிஸ்தான் அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
- அமெரிக்க அணி எஞ்சிய 2 போட்டியிலும் தோல்வியடையந்தால் மட்டுமே பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றில் இடம் பெறும்.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, கனடாவை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. இந்தியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 120 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் தோல்வியடைந்தது.
இதனால் பாகிஸ்தான் அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க அணி எஞ்சிய 2 போட்டியிலும் தோல்வியடைய வேண்டும். மேலும் ரன்ரேட் அதிகமாக இருக்க வேண்டும். இது நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றில் இடம் பெறும்.