கிரிக்கெட்

98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா

Published On 2024-05-05 17:51 GMT   |   Update On 2024-05-05 17:51 GMT
  • லக்னோ அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்தது.
  • கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

லக்னோ:

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன் - சால்ட் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில் அதிரடியாக விளையாடிய சால்ட் 32 ரன்களில் (14 பந்துகள்) ஆட்டமிழந்தார். சுனில் நரைன், லக்னோ பந்து வீச்சை வெளுத்து வாங்கிய 39 பந்துகளில் 81 ரன்கள் அடித்த நிலையில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் அடித்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - குல்கர்னி களமிறங்கினர். குல்கர்னி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். மந்தமாக விளையாடிய கேஎல் ராகுல் 25 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஹூடா 5 ரன்னிலும் அதிரடியாக விளையாடி ஸ்டோய்னிஸ் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் லக்னோ அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரானா 3 விக்கெட்டுகளையும், ரஸல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Tags:    

Similar News