சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த ஆஸ்திரேலிய வீரர்
- உஸ்மான் கவாஜா கடந்த 2 ஆண்டாக தனது பார்மை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறார்.
- கடைசி 2 ஆண்டுகளில் அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை.
சிட்னி:
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா இதுவரை 87 டெஸ்ட், 40 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 8,001 ரன்கள் எடுத்துள்ளார். 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற ஆஸ்திரேலியா அணியில் முக்கிய வீரராக ஜொலித்த கவாஜா, கடந்த 2 ஆண்டாக தனது பார்மை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறார்.
கடைசி இரண்டு ஆண்டுகளில் அவருடைய டெஸ்ட் பேட்டிங் சராசரி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.
2025-ம் ஆண்டில் அவரிடமிருந்து ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் மட்டுமே வந்துள்ளது. நடப்பு ஆஷஸ் தொடரிலும் 5 இன்னிங்சில் வெறும் 153 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதற்கிடையே, உஸ்மான் கவாஜா தனது பார்மை இழந்து போராடி வரும் நிலையில், ஆஷஸ் தொடரில் 5வது டெஸ்ட்டில் ஓய்வை அறிவிக்க வேண்டும். அவரது சொந்த மண்ணான சிட்னியில் ஓய்வு அறிவிப்பது சிறந்த முடிவு என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உஸ்மான் கவாஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், சர்வதேசபோட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். சிட்னி டெஸ்ட் தான் எனது கடைசி டெஸ்ட் என தெரிவித்தார்.