கிரிக்கெட் (Cricket)

உள்ளூர் போட்டியில் நானும் தம்பியும் ஒரே நேரத்தில் இதை செய்யனும்- சர்பராஸ் கான் நெகிழ்ச்சி

Published On 2026-01-01 16:45 IST   |   Update On 2026-01-01 16:45:00 IST
  • மும்பை அணிக்காக சகோதரர்கள் சர்பராஸ் கான் - முஷீர் கான் விளையாடி வருகிறார்கள்.
  • விளையாட்டைப் பற்றிய எங்களுடைய புரிதல் மற்றும் டெக்னிக் ஒரே மாதிரியாக இருக்கும்.

விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மும்பை அணிக்காக சகோதரர்கள் சர்பராஸ் கான் - முஷீர் கான் விளையாடி வருகிறார்கள். அந்தத் தொடரில் ஜெய்ப்பூரில் டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கோவாவை 87 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது.

இதில் மும்பை அணிக்காக ஜெய்ஸ்வால் 46, முஷீர் கான் 60, சர்பராஸ் கான் சதமடித்து 157, ஹர்டிக் டாமோர் 53 ரன்கள் அடித்து மும்பை 444 ரன்கள் குவிக்க முக்கிய பங்காற்றினார்கள்.

குறிப்பாக 3-வது விக்கெட்டுக்கு தம்பியுடன் சேர்ந்து கோவாவை வெளுத்து வாங்கிய சர்ப்ராஸ் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்.

இந்நிலையில் ஒரு உள்ளூர் போட்டியில் தாமும் முசீர் கானும் சேர்ந்து ஒன்றாக சதமடிக்க வேண்டும் என்பது கனவு என்று சர்பராஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஒரு போட்டியில் நாங்கள் இருவரும் சதங்கள் அடித்து ஒன்றாக பேட்டை உயர்த்த வேண்டும் என்பது கனவாகும். அதை நாங்கள் உண்மையாக செய்ய விரும்புகிறோம். நாங்கள் ரஞ்சிக் கோப்பையில் சதமடிக்க நினைத்தது நடக்கவில்லை. இன்றும் முஷீர் சதமடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

நிறைய நேரம் இருப்பதால் அது நிச்சயம் நடக்கும். அதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். அதுவும் வேடிக்கையானதாகும். நானும் என்னுடைய தம்பியும் ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்து வைத்துள்ளோம். விளையாட்டைப் பற்றிய எங்களுடைய புரிதல் மற்றும் டெக்னிக் ஒரே மாதிரியாக இருக்கும்.

களத்தில் விளையாடும் போது எப்படி பவுலரை கையாளலாம் அல்லது ஆட்டத்தின் வேகத்தை கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றி நாங்கள் ஒருவரை ஒருவர் ஆலோசித்துக் கொள்வோம்.

என்று சர்பராஸ் கூறினார்.

Tags:    

Similar News