கிரிக்கெட்
null

வெற்றியை தல டோனிக்கு சமர்பிக்கிறோம்: இது அவருக்கானது- ஜடேஜா

Update: 2023-05-30 06:08 GMT
  • எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சென்னை அணிக்காக ஐந்தாவது முறை கோப்பையை வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது.
  • உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சர்யத்தை கொடுத்தது.

அகமதாபாத்:

ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

கடைசி பந்தில் சி.எஸ்.கே. அணியை வெற்றி பெற வைத்தது குறித்து ஜடேஜா கூறியதாவது:-

எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சி.எஸ்.கே. அணிக்காக 5-வது ஐ.பி.எல். கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அற்புதமான உணர்வு. எனது சொந்த ஊரில் பலர் சி.எஸ்.கே.வுக்கு ஆதரவாக வந்துள்ளனர். உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சரியத்தை கொடுத்தது.

இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான டோனிக்கு அர்ப்பணிக்கிறேன்.

கடைசி நேரத்தில் எதுவாக இருந்தாலும் நான் அதிரடியாக ஆட வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தேன். மோகித்சர்மா மெதுவான பந்துகளை அதிகம் வீசக் கூடியவர். மெதுவான யார்க்கர் பந்து வீசக்கூடியவர் என்பதால் நேராக அடிக்க நினைத்தேன். அப்படியே செய்தேன்.

இந்த வெற்றி தருணத்தில் சி.எஸ்.கே.வின் ஒவ்வொரு ரசிகருக்கும் வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எப்படி உற்சாகப்படுத்துகிறீர்களோ அதை தொடருங்கள்.

இவ்வாறு ஜடேஜா கூறினார்.

Tags:    

Similar News