கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024: கெய்க்வாட் மிரட்டலால் 212 ரன்களை குவித்தது சி.எஸ்.கே.

Published On 2024-04-28 15:56 GMT   |   Update On 2024-04-28 15:56 GMT
  • டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தனர்.
  • புவனேஷ்வர் குமார் மற்றும் உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 28) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில்பெங்களூரு அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

இதைத் தொடர்ந்து நடைபெறும் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரரான ரஹானே 9 ரன்களை எடுத்து ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடினார்.

டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தனர். மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவம் துபே வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் கெய்க்வாட் 54 பந்துகளில் 98 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

போட்டி முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

Tags:    

Similar News