கிரிக்கெட் (Cricket)

எங்களுக்கு நாங்களே நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டோம்- தோல்வி குறித்து டேவிட் வார்னர் கருத்து

Published On 2023-05-11 12:31 IST   |   Update On 2023-05-11 12:31:00 IST
  • முதல் மூன்று விக்கெட்டுகளை நாங்கள் விரைவாக இழந்துவிட்டோம்.
  • எங்கள் அணிக்கு துவக்க வீரர்கள் தான் முக்கிய பலம். ஆனால் அதுவே எங்களுக்கு இந்த போட்டியில் சரியாக அமையவில்லை.

16-வது ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. அதன்பின் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவாக இழந்ததே தோல்விக்கான முக்கிய காரணம் டெல்லி அணியின் கேப்டனான டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

முதல் மூன்று விக்கெட்டுகளை நாங்கள் விரைவாக இழந்துவிட்டோம். குறிப்பாக முதல் ஓவரிலேயே நான் விக்கெட்டை இழந்து எங்களுக்கு நாங்களே நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டோம். எங்கள் அணிக்கு துவக்க வீரர்கள் தான் முக்கிய பலம். ஆனால் அதுவே எங்களுக்கு இந்த போட்டியில் சரியாக அமையவில்லை.

168 ரன்கள் என்பது இலகுவாக எட்டக்கூடிய இலக்கு தான். முதல் 6 ஓவர்களை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே எப்படிப்பட்ட இலக்கையும் எட்ட முடியும். எங்களுக்கு ஒரு பார்ட்னர்சிப் கூட சரியாக அமையவில்லை. நான் சில விசயங்களை முயற்சித்து பார்தோம். ஆனால் அது எங்களுக்கு சாதகமாக அமையவில்லை.

இவ்வாறு டேவிட் வார்னர் கூறினார்.

Tags:    

Similar News