கிரிக்கெட்

பாண்ட்யா, ரஷித்கானை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய டோனி- வைரலாகும் வீடியோ

Published On 2023-05-24 08:52 GMT   |   Update On 2023-05-24 08:52 GMT
  • ஐபிஎல் தொடரில் குஜராத் அணி சேசிங் செய்வதில் மிக சிறந்த அணியாக செயல்பட்டு வந்தது.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்தை முதல்முறையாக வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

சென்னை:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குவாலிபையர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்தை முதல்முறையாக வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் 172 ரன்கள் மட்டுமே அடித்த சிஎஸ்கே அணி வெற்றி பெறுமா என ரசிகர்களுக்கு கேள்வியாக இருந்தது. ஏனென்றால் குஜராத் அணி சேசிங் செய்வதில் மிக சிறந்த அணியாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரஷித்கான் விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது வேற லெவலாக இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் அணி பவர் பிளேயில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதில் ஒன்று பாண்ட்யா. இவருக்கு டோனி அழகாக ஸ்கெட்ச் போட்டார் என்றே சொல்லலாம்.

பவர் பிளேயில் முதல் 5 ஓவரில் 39 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பவர் பிளேயின் கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் குஜராத் அணி வீரர்கள் இருந்தனர். அந்த ஓவரை தீக்சனா வீசினார். முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே வந்தது. இதனால் 4-வது பந்தை பாண்ட்யா ரிஷ்க் எடுத்து ஆப் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சி செய்தார். அது பீல்டரிடன் தஞ்சம் புகுந்தது. 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே வந்த நிலையில் 2 பந்துகளில் கண்டிப்பாக ரிஷ்க் ஷாட் ஆட முயற்சிபார்கள் என நினைத்த டோனி உடனே லேக் திசையில் உள்ள பீல்டரை உடனே ஆப் திசையில் மாற்றி அதே திசையில் பந்து வீச வைத்தார்.


இதை கொஞ்சம் கூட மதிக்காத பாண்ட்யா அடுத்த பந்தையே மீண்டும் ஆப் திசையில் அடிக்க முயற்சித்தார். ஆனால் அது ஜடேஜா கையில் புகுந்தது. இதனால் பாண்ட்யா 8 ரன்னில் வெளியேறினார்.

இதனையடுத்து கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி வந்த ரஷித் கானுக்கு அருமையான திட்டம் தீட்டினார். அனைத்து திசையில் அருமையாக விளையாடி கொண்டிருந்த ரஷித் கானுக்கு ஆப் திசையில் பீல்டர்களை அதிகப்படுத்திய டோனி, பந்து வீச்சாளரை ஆப் திசையில் வைடு யார்க்கர் போட சொன்னார். டோனி கணித்தப்படியே அவர் வைத்த பொறியில் ரசித் கான் எலி போல் சிக்கினார்.

இதனால் குஜராத் அணி 157 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News