கிரிக்கெட் (Cricket)

டிராவிஸ் ஹெட் அதிரடி: 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 61 ரன்கள் குவிப்பு

Published On 2023-02-18 17:15 IST   |   Update On 2023-02-18 17:15:00 IST
  • டிராவிஸ் ஹெட் 40 பந்துகளில் 39 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
  • கவஜா 6 ரன்னில் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 139 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதனையடுத்து அஸ்வின் - அக்ஷர் படேல் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய அக்சர் படேல் 74 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 1 ரன் பின் தங்கி உள்ளது.

ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளும் மேத்யூ குஹ்னெமன், டாட் மர்பி தலா 2 விக்கெட்டும் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடினர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் 1 சிக்சர் உள்பட 5 பவுண்டரிகளை விளாசினார். கவாஜா 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 12 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் குவித்துள்ளது. ஹெட் 40 பந்துகளில் 39 ரன்களுடனும் மார்னஸ் லாபுசாக்னே 19 பந்துகளில் 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News