கிரிக்கெட்
null

முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பந்து வீச்சு- 6 வருடத்திற்குப் பிறகு ஜடேஜா- அஸ்வின் ஜோடி

Published On 2023-09-22 07:42 GMT   |   Update On 2023-09-22 07:50 GMT
  • அஸ்வின் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்
  • ஷ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு

உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது. அதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியின் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி விவரம்:-

1. டேவிட் வார்னர், 2. மிட்செல் மார்ஷ், 3. ஸ்மித், 4. மார்னஸ் லபுசேன், 5. கேமரூன் கிரீன், 6. ஜோஷ் இங்க்லிஸ் (விக்கெட் கீப்பர்), 7. மார்கஸ் ஸ்டோய்னிஸ், 8. மேத்யூ ஷார்ட், 9. பாட் கம்மின்ஸ் (கேப்டன்), 10. சீன் அப்போட், 11. ஆடம் ஜம்பா

இந்திய அணி விவரம்:-

1. சுப்மான் கில், 2. ருதுராஜ் கெய்க்வாட், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. கே.எல். ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), 5. இஷான் கிஷன், 6. சூர்யகுமார் யாதவ், 7. ஜடேஜா, 8. அஸ்வின், 9. ஷர்துல் தாக்குர், 10. பும்ரா, 11. முகமது ஷமி

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் நட்சத்திர ஜோடியாக அஸ்வின்- ஜடேஜா ஜோடி திகழ்கிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் இருவரும் இணைந்து விளையாடியது கிடையாது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆறு வருடத்திற்கு முன் இருவரும் இணைந்து விளையாடினர். அதன்பின் தற்போது சேர்ந்து விளையாடுகிறார்கள்.

Tags:    

Similar News