கிரிக்கெட் (Cricket)

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதம் - வரலாறு படைத்தது இந்திய அணி

Published On 2023-01-19 12:41 IST   |   Update On 2023-01-19 12:41:00 IST
  • இந்திய அணி தரப்பில் ஒருநாள் போட்டிகளில் 7 இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
  • ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய ஐந்தாவது இந்திய வீரர் சுப்மன் கில் ஆவார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக இரட்டை சதம் அடித்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது.

நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். அவர் 149 பந்துகளில் 9 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 208 ரன்கள் குவித்தார்.

ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய ஐந்தாவது இந்திய வீரர் சுப்மன் கில் ஆவார். அதேபோல் இந்திய அணியும் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது, இந்திய அணி தரப்பில் ஒருநாள் போட்டிகளில் 7 இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

மேலும், அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்தவரும் இந்திய வீரர் தான். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 265 ரன்கள் எடுத்துள்ளார்.

இரட்டை சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர்(200), சேவாக்(219), இஷான் கிஷன்(210), ரோகித் சர்மா(209)(208)(265) ஆகியோர் வரிசையில் கில் இணைந்தார்.

இந்திய வீரர்கள் தவிர நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (237), வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் (215), பாகிஸ்தான் வீரர் ஃபஹர் ஜமான் (210) ஆகியோர் மட்டுமே இரட்டை சதம் அடித்துள்ளனர்.

Tags:    

Similar News