கிரிக்கெட் (Cricket)

ஒத்த ஆளு ஆட்டத்தை மாற்றி விட்டார்- தோல்வி குறித்து பயிற்சியாளர் டிராவிட் கருத்து

Published On 2024-01-29 15:00 IST   |   Update On 2024-01-29 15:00:00 IST
  • 50 ரன்னை தாண்டுவதற்கு மற்றவர்கள் கஷ்டப்பட்ட போது போப் 196 ரன்கள் குவித்தது சிறப்பானது.
  • இங்கிலாந்து வீர் ஹார்ட்லேவுக்கு இந்த டெஸ்ட் மிகவும் அபாரமானது.

ஐதராபாத்:

இங்கிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 231 ரன் இலக்கை எடுக்க முடியாமல் தோற்றது மிகவும் பரிதாபமே.

இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-

இங்கிலாந்தின் வெற்றிக்கு ஆலி போப் காரணமாக திகழ்ந்தார். அவரது ஆட்டம் முற்றிலும் மாறுபட்டு இருந்தது. அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார். அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. 50 ரன்னை தாண்டுவதற்கு மற்றவர்கள் கஷ்டப்பட்ட போது இவர் 196 ரன்கள் குவித்தது சிறப்பானது. எஸ்.பரத்-அஸ்வின் ஜோடி போராடியது பாராட்டத்தக்கது. நாங்கள் முதல் இன்னிங்சில் இன்னும் கூடுதலாக 70 முதல் 80 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும். இங்கிலாந்து வீர் ஹார்ட்லேவுக்கு இந்த டெஸ்ட் மிகவும் அபாரமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News