கிரிக்கெட்

2022-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதை தட்டிச் சென்றார் சூர்யகுமார் யாதவ்

Published On 2023-01-25 12:24 GMT   |   Update On 2023-01-25 12:24 GMT
  • டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.
  • ஒரு காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன் 1000 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.

மும்பை:

2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதை இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தட்டி சென்றார். டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.

இவர் 2022-ம் ஆண்டில் 31 டி20 போட்டிகளில் விளையாடி 1164 ரன்கள் குவித்துள்ளார். 46.56 சராசரி மற்றும் 187.46 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன் 1000 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டில் சூர்யகுமார் யாதவ் 68 சிக்சர்களை விளாசியுள்ளார். 2 சதங்கள் மற்றும் 9 அரை சதங்களை பதிவு செய்துள்ளார்.

மொத்தம் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1578 ரன்கள் குவித்துள்ளார். அதில் 3 சதங்களும் 13 அரை சதங்களும் அடங்கும்

Tags:    

Similar News