இன்னும் அதைப்பற்றி சிந்திக்கவில்லை: ராகுல் டிராவிட்
- ஐசிசி-யின் இரண்டு இறுதிப் போட்டியிலும், ஒரு அரையிறுதியிலும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
- இவரது தலைமையில் இந்திய சீனியர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியாமல் ஏமாற்றம்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டி தோல்வி அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
ராகுல் டிராவிட் இரண்டு ஐசிசி-யின் இறுதிப் போட்டியிலும், ஒரு அரையிறுதி போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்திச் சென்றுள்ளார். எதிர்கால பயிற்சியாளர் பதவி குறித்தும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிவற்றில் ஒன்றிற்கு பயிற்சியாளராக இருப்பீர்களா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் "என்னுடைய பதவியின் எதிர்காலம் குறித்து சிந்திக்கவில்லை. தற்போதுதான் இந்த போட்டியில் இருந்து வெளியே வந்துள்ளேன். அது குறித்து யோசிக்க நேரம் இல்லை. எனக்கு நேரம் கிடைக்கும்போது அது குறித்து யோசிப்பேன். இந்த நேரம் வரை, இந்த தொடரில்தான் முழுக் கவனம் செலுத்தினேன். இதைத்தவிர என்னுடைய மனதில் வேறு ஒன்றுமில்லை. எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று எதையும் நினைக்கவில்லை" என்றார்.