கிரிக்கெட்

அபராஜித் அதிரடி அரைசதம்: நெல்லை அணிக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Published On 2023-06-24 11:30 GMT   |   Update On 2023-06-24 11:30 GMT
  • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் அபராஜித் அதிரடியாக விளையாடி 79 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
  • நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளையும் லக்ஷய் ஜெயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகிறது.இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரதோஷ் பால் - ஜெகதீசன் களமிறங்கினர். பிரதோஷ் பால் 2-வது ஓவரிலேயே போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபா அபராஜித் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 7-வது ஓவரில் சிஎஸ்ஜி அணி தனது 2 விக்கெட்டை பறிகொடுத்தது. ஜெகதீசன் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த சஞ்சய் யாதவ் 15 ரன்னிலும் லோகேஷ் ராஜ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் சிஎஸ்ஜி அணி 74 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து அபராஜித்துடன் ஹரிஸ் குமார் ஜோடி சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 101 ரன் இருந்தபோது ஹரிஸ் குமார் 20 ரன்னில் வெளியேறினார்.

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபா அபராஜித் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 79 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளையும் லக்ஷய் ஜெயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

Tags:    

Similar News